Enable Javscript for better performance
குக் 168*: இங்கிலாந்து 290-3- Dinamani

சுடச்சுட

    
    48

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அலாஸ்டர் குக் சதம் கடந்து விளாச, 290 ரன்களை எட்டியது இங்கிலாந்து.
     இந்த இரு அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 3ஆம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணியின் அலாஸ்டர் குக் 39 ரன்களுடனும், மொயின் அலி 15 ரன்களுடனும் தொடங்கினர்.
     எனினும், நிலைத்து ஆட இயலாமல் மொயின் அலி 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இயான் பெல், அலாஸ்டர் குக்குடன் கூட்டு சேர்ந்து ஆடினார்.
     நிதானமாக ஆடிய குக் சதம் கடந்தார். அவருடன் இயான் பெல்லும் அரை சதம் கடந்தார். எனினும், சதமடிக்க இயலாத வகையில் இயான் பெல் 63 ரன்களில் இருந்தபோது அவரை ஆட்டமிழக்கச் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார் வஹாப் ரியாஸ்.
     அவரைத் தொடர்ந்து வந்த மார்க் வுட்டும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறத்தில் அலாஸ்டர் குக் 150 ரன்களைக் கடந்து நிதானத்துடன் தொடர்ந்தார். இதனால், மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.
     அலாஸ்டர் குக் 168 ரன்களுடனும், ஜோ ரூட் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai