சுடச்சுட

    

    டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனையும், உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான சாய்னா நெவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
     சுமார் ரூ.4.22 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்தப் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பானை புதன்கிழமை எதிர்கொண்டார் சாய்னா நெவால்.
     இருவருக்கும் இடையேயான இந்த பரபரப்பான ஆட்டம் 1 மணி நேரம், 9 நிமிடங்கள் நீடித்தது. இதன் முடிவில் 23-21, 14-21, 21-18 என்ற செட் கணக்கில் புசானனை வென்றார் சாய்னா.
     முன்னதாக, உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சாய்னாவுக்கு சற்று சவாலாகவே விளையாடினார் உலகத் தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருக்கும் புசானன். முதலில் புசானன் முன்னிலை பெற்றிருந்தாலும், பின்னர் சாய்னா தனது வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி புசானனை பின்னுக்குத் தள்ளினார்.
     இதனிடையே, ஜப்பானின் மினாட்சு மிட்டானி-தாய்லாந்தின் பார்ன்டிப் புரானாப்ராசெர்ட்சுக் ஆகியோரிடையேயான மோதலில் வெற்றி பெறுபவரை, தனது இரண்டாவது சுற்றில் சந்திக்க உள்ளார் சாய்னா நெவால்.
     சாய்னா தனது முதல் சுற்றில் தோற்கடித்த புசானனை, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜப்பான் ஓபனில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
     பிரனாய் தோல்வி: இதனிடையே, இந்திய வீரர் பிரணாய் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் தனது முதல் சுற்றில் தோல்வியைத் தழுவினார்.
     உலகத் தரவரிசையில் 16ஆவது இடத்தில் இருக்கும் பிரணாய், சீன தைபே வீரரான சு ஜென் ஹாவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-23, 21-19, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார் பிரணாய்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai