சுடச்சுட

    

    பதக்கம் வென்ற 17 பேருக்கு ஊக்கத் தொகை: முதல்வர் வழங்கினார்

    By சென்னை  |   Published on : 16th October 2015 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    51

    பதக்கம் வென்ற 17 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
    இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
    கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியாவில் நடைபெற்ற 17-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஹாக்கியில் தங்கம் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன், ருபீந்தர் பால் சிங் ஆகிய இருவருக்கும் உயரிய ஊக்கத் தொகையான தலா ரூ.50 லட்சமும், கபடி விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற எஸ்.ராஜகுருக்கு சிறப்பு உயரிய ஊக்கத் தொகையான ரூ.30 லட்சம், ஸ்குவாஷ் விளையாட்டில் ஆடவர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற செளரவ் கோஷல், ஹரிந்தர் பால் சிங் மற்றும் குஷ் குமார் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையான தலா ரூ.50 லட்சம் காசோலைகள், ஸ்குவாஷ் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற செளரவ் கோஷல் மற்றும் ஸ்குவாஷ் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, அனகா அலங்காமனி, அபராஜிதா பாலமுருகன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையான தலா ரூ.30 லட்சம் காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
    ஸ்குவாஷ் விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல், பாய்மரப் படகோட்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஐஸ்வர்யா நெடுஞ்செழியன், வர்ஷா கெளதம், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ராஜீவ் ஆரோக்கியா ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையான தலா ரூ.20 லட்சம், 2014- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, வீரினிஜிங் நகரில் நடைபெற்ற 3-ஆவது உலகக் கோப்பை டெனிகாய்ட் போட்டிகளில் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த காயத்ரி மற்றும் வி. ஜேசுதாஸ் ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள்.
    2013-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர்களுக்கான உலக இறகுபந்து வாகையர் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். பிரகாஷ்க்கு உயரிய ஊக்கத் தொகையான ரூ.10 லட்சத்துக்கான காசோலை, 2010 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற எஸ். ஜீவகுமார்க்கு உயரிய ஊக்கத் தொகையான ரூ.20 லட்சம்,
    2014 ஆம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களான எ.நாகராஜன், டி. முத்து (பளுதூக்குதல்), அஞ்சான் சின்னப்பா மற்றும் சங்கர் பாசு (ஸ்குவாஷ்), எ. முரளிதரராவ், எ. சீனிவாராவ், மற்றும் எ. ஆண்டனி அற்புதராஜ் (மேசைப்பந்து), ஆரீஃப் அகமதுபர்ஹத் (ஹாக்கி) ஆகிய 8 பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் காசோலை என மொத்தம் ரூ.6 கோடியே 50 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.









     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai