Enable Javscript for better performance
முதல் இன்னிங்ஸில் இலங்கை 484- Dinamani

சுடச்சுட

    
    46

    இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 484 ரன்கள் எடுத்தது.
     அந்த அணியின் கருணரத்னே 186 ரன்களும், தினேஷ் சண்டிமால் 151 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். முன்னதாக, கருணரத்னே 135 ரன்களுடனும், சண்டிமால் 72 ரன்களுடன் இலங்கை அணிக்கான இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்த இருவரது பார்ட்னர்ஷிப்பும் நிலைத்து நின்றது.
     இந்நிலையில், இலங்கை அணியின் ஸ்கோர் 339ஆக இருந்தபோது கருணரத்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார் சாமுவேல்ஸ். மறுபுறம், சண்டிமால் சதமடித்து நிலைத்து நின்றார். கருணரத்னேவுக்குப் பிறகு களமிறங்கிய மேத்யூஸ் சண்டிமாலுடன் இணை சேர்ந்து ஆடினார்.
     ஆனால், இந்தக் கூட்டணியை நிலைக்க விடவில்லை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் டெய்லர். சண்டிமால் 151 ரன்கள் எடுத்திருந்தபோது டெய்லர் வீசிய பந்தை பிளாக்வுட்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
     அடுத்த வந்த ஸ்ரீவதனா, வந்த வேகத்திலேயே 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். மேத்யூஸ் நிதானத்துடன் அரை சதத்தை நெருங்கி வந்தார். எனினும், 48 ரன்கள் எடுத்திருந்தபோது ஹோல்டரின் பந்தில் வீழ்ந்தார் மேதியூஸ்.
     அடுத்த வந்த இலங்கை பேட்ஸ் மேன்கள் எவரும் நிலைக்கவில்லை. குஷால் பெரெரா 23 ரன்களும், தம்மிகா பிரசாத் 13 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் தடுமாறியது.
     தொடர்ந்து வந்த ரங்கணா ஹெராத், நுவான் பிரதீப் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இறுதியாக, தரிந்து கெளஷல் மட்டும் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால், இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 484 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில், பிஷு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
     டெய்லர் 2 விக்கெட்டுகளும், ரோச், ஹோல்டர், கேப்ரியல், சாமுவேல்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
     மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸ்: இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி தனக்கான இன்னிங்ûஸ தொடங்கியது.
     அந்த அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய பிராத்வைட், ஹோப் ஆகியோர் நிலைத்து ஆட இயலாமல் பெவிலியன் திரும்பினர். இதில் பிராத்வைட் 19 ரன்களும், ஹோப் 23 ரன்களும் எடுத்தனர்.
     பிராட்வைட்டைத் தொடர்ந்துடேரன் பிராவோவும், ஹோப்பைத் தொடர்ந்து சாமுவேல்ஸும் களமிறங்கினர்.
     இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. பிராவோ 15 ரன்களுடனும், சாமுவேல்ஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai