சுடச்சுட

  
  18

  பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று 8 விக்கெட் இழப்புக்கு 569 எடுத்துள்ளது. அந்த அணியின் அலாஸ்டர் குக் இரட்டைச் சதம் கடந்தார்.
   நான்காம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் அலாஸ்டர் குக் 168 ரன்களுடனும், ஜோ ரூட் 3 ரன்னுடனும் இருந்தனர்.
   இந்தக் கூட்டணி நிதானத்துடன் விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. சிறப்பாக விளையாடிய அலாஸ்டர் குக் இரட்டைச் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் அரைசதம் கடந்தார்.
   எனினும், அவர் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 85 ரன்கள் எடுத்திருந்தபோது ரஹத் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து வந்த பேர்ஸ்டோ, வந்த வேகத்திலேயே 8 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்டோக்ஸ், குக்குடன் கைகோர்த்து நிலைத்து ஆடினார். இதனிடையே, குக் 250 ரன்களைக் கடந்து முன்னேறினார். ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷோயிப் மாலிக்கின் பந்துவீச்சில் வீழ்ந்தார்.
   அடுத்த சில பந்துகளிலேயே அலாஸ்டர் குக்கின் விக்கெட்டையும் வீழ்த்திய பெருமையை தனதாக்கிக் கொண்டார் ஷோயிப் மாலிக். அலாஸ்டர் குக் மொத்தம் 528 பந்துகளில் 18 பவுண்டரிகள் உள்பட 263 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.
   இதையடுத்து வந்த ஜோஸ் பட்லர் 28 பந்துகளுக்கு 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்படி நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 569 ரன்கள் எடுத்தது.
   அந்த அணியின் ரஷீது 6 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் ரன்கள் ஏதும் இன்றியும் களத்தில் உள்ளனர்.
   பாகிஸ்தான் அணி சார்பில், ஷோயிப் மாலிக் 2 விக்கெட்டுகளும், ரஹத் அலி, வஹாப் ரியாஸ், ஸுல்ஃபிகர் பாபர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai