சுடச்சுட

    

    ஐபிஎல்: சென்னை, ராஜஸ்தான் அணிகள் நீடிக்கும்?

    By  புது தில்லி,  |   Published on : 17th October 2015 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    17

    சூதாட்டப் புகார் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ரத்து செய்யும் வகையில், வரும் பிசிசிஐ கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படாது எனத் தெரிகிறது.
     பிசிசிஐ தலைவராக சஷாங்க் மனோகர் புதிதாகப் பொறுப்பேற்றதை அடுத்து, அவர் தலைமையிலான முதல் செயற்குழுக் கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
     இதுகுறித்து, பிசிசிஐ மூத்த அதிகாரியும், ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
     ஒன்பதாவது ஐபிஎல் சீசன் தொடர்பாக ஐபிஎல் செயற்குழுவின் அறிக்கை மீதான கலந்தாலோசனைக்காகவே வரும் ஞாயிற்றுக்கிழமை பிசிசிஐ கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரையில், ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி, தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்கம் செய்யும் வாய்ப்புகள் இல்லை.
     ஐபிஎல் சூதாட்டப் புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட லோதா கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். எனினும், அதில் கூறப்பட்டுள்ளதைத் தவிர்த்து புதிதாக எந்த ஒரு தண்டனையையும் அந்த அணிகளுக்கு வழங்கும் தேவை இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
     இதனிடையே, ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் விளையாடுவது அவசியம் என்று விளம்பரதாரர்களும், ஒளிபரப்பு நிறுவனங்களும் வலியுறுத்தியதன் பேரில், 2 புதிய அணிகளுக்காக புதிய ஏலத்தை நடத்த ஐபிஎல் செயற்குழு பரிந்துரைத்துள்ளது.
     அத்துடன், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி தீர்ப்பின்படி, சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீதான 2 ஆண்டு தடை முடிவுக்கு வந்த பிறகு, ஐபிஎல் போட்டியை 10 அணிகளைக் கொண்டு நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai