சுடச்சுட

  

  கிரிக்கெட் வீரர்களை முற்றுகையிடுவோம்: ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை!

  By DN  |   Published on : 17th October 2015 02:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே 3-வது ஒருநாள் போட்டி, நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின்போது மறியல் போராட்டம் நடத்த போவதாக பட்டேல் சமூக ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டக்குழுவை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தியதன் மூலம் பலரால் பேசப்பட்டவர் ஹர்திக் படேல்.

  கிரிக்கெட் போட்டியின்போது போராட்டம் நடத்துவது குறித்து ஹர்திக் கூறுகையில்,, ‘எங்கள் சமூகமான பட்டேல் சமூகத்தினருக்கு இந்த ஒருநாள் போட்டியை காண டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை. பல டிக்கெட்டுகள் விற்கப்படாத நிலையில் ஏன் பட்டேல் சமூகத்தினருக்கு டிக்கெட்டுகள் மறுக்கப்பட்டுள்ளது என்பதை சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் விளக்க வேண்டும். ராஜ்கோட் நகர எல்லையில் உள்ள கண்டேரி கிராமத்தில் அமைந்துள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட போகிறோம். மேலும் நாளைய போட்டியின்போது மைதானத்துக்கு வருகிற இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளோம் என்று ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.

  ஹர்திக்கின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, எந்த வித இடையூறுமில்லாமல் ஒருநாள் போட்டி நடைபெற தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai