சுடச்சுட

    16

    ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் 13ஆவது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி.
     இந்த இரு அணிகள் இடையேயான ஆட்டம் நவி மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தைக் காண மொத்தம் 21,321 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
     ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் விளையாடின. ஒன்றுக்கொன்று சளைக்காமல் மோதியதன் காரணமாக இரு அணிகளாலும் கோல் கம்பத்தை நெருங்க இயலவில்லை.
     இவ்வாறாகவே ஆட்டத்தின் பாதி நேரம் முடிவடைந்தது. இதனால், இடைவேளை வரையில் இரு அணிகளும் கோல்கள் ஏதும் இன்றி சமநிலையில் இருந்தன.
     சென்னை அசத்தல் ஆரம்பம்: இதையடுத்து, இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தனது கோல் கணக்கைத் தொடங்கியது சென்னை அணி.
     ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் மும்பை அணி வீரர், சக வீரருக்கு பந்தை பாஸ் செய்தார்.
     அப்போது சரியான இடைவெளியில் அங்கு நுழைந்து சென்னை அணியின் கேப்டன் இலானோ அந்தப் பந்தை தன் வசப் படுத்தி கடத்திச் சென்றார்.
     கோல் கம்பத்தை நெருங்கியதும் அதை லாவகமாக சக வீரர் மென்டோஸாவிடம் பாஸ் செய்ய, அதை எளிதாக கோலாக்கினார் அவர். இது இந்த சீசனில் மென்டோஸா அடித்த 4ஆவது கோலாகும்.
     இதனிடையே, மும்பை அணியின் கோல் முயற்சிகள் யாவும் பலிக்கவில்லை. தனது அணியின் கோல் கணக்கைத் தொடங்க அதன் வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
     எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே தனது இரண்டாவது கோலுக்கான வாய்ப்பைப் பெற்றது சென்னை அணி. மீண்டும் மென்டோஸாவே அருமையாக கோலடித்தார். அவர் கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்து கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு மீண்டும் திரும்பி வந்தது. சற்றும் தளராத மென்டோஸா அதை மீண்டும் தலையால் முட்டி அற்புதமான கோலாக மாற்றினார்.
     இதையடுத்து, மும்பை அணிக்கு கோல்கள் ஏதும் கிடைக்காத காரணத்தால், ஆட்ட நேரத்தின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது சென்னை அணி.
     மும்பை, அக். 16: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் 13ஆவது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி.

     இன்றைய ஆட்டம்
     எஃப்சி புணே சிட்டி
     அட்லெடிகோ டி கொல்கத்தா
     நேரம் : இரவு 7 மணி, இடம்: புணே
     
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai