சுடச்சுட

    

    பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்: 5 பிரிவுகளில் இந்தியாவுக்கு பட்டம்

    By  புணே,  |   Published on : 17th October 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 5 பிரிவுகளில் "சிறந்த பளு தூக்குதல் வீரர்/வீராங்கனை' பட்டங்களை வென்றது.
     மொத்தம் 6 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், ஆடவர் மூத்தோர், மகளிர் மூத்தோர், ஆடவர் இளையோர், மகளிர் இளையோர், இளம் சிறுமிகள் ஆகிய 5 பிரிவுகளில் இந்திய அணி பட்டம் வென்றது.
     ஆடவர் மூத்தோர் பிரிவில் எஸ்.சதீஷ் குமாரும் (77 கிலோ), மகளிர் மூத்தோர் பிரிவில் எஸ்.மீராபாய் சானுவும் (48 கிலோ) பட்டம் வென்றனர். ஆடவர் இளையோர் பிரிவில் ஆர்.வி.ராகுலும் (85 கிலோ), மகளிர் இளையோர் பிரிவில் பிரமீளா கிரிசானியும் (53 கிலோ) பட்டம் வென்றனர்.
     அதுதவிர, லாலு டக்கு (69 கிலோ) இளம் சிறுவர் பிரிவிலும், மோகினி சவாண் (48 கிலோ) இளம் சிறுமி பிரிவிலும் பட்டம் வென்றனர்.
     5 தங்கம்: முன்னதாக, இந்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பூனம் யாதவ் (63 கிலோ) மகளிருக்கான இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் தலா ஒரு தங்கம் வென்றார்.
     அதேபோல், ஆடவர் பிரிவில் விஷ்ணுகாந்த் எஸ், ரகாலா வெங்கட் ராகுல், விகாஸ் தாக்கூர் ஆகியோர் தங்களின் எடைப் பிரிவில் தங்கம் வென்றனர். இதனிடையே, மகளிருக்கான 63 கிலோ இளம் சிறுமிகள் பிரிவில் ஜி.லலிதா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai