சுடச்சுட

    

    வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் கிரிக்கெட்டில் பெண் வீராங்கனை!

    By  அடிலெய்டு,  |   Published on : 17th October 2015 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    19

    கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை, ஆஸ்திரேலியாவில் ஏ-கிரேடு ஆடவர் கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாட உள்ளார்.
     இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான சாரா டெய்லர் இந்த வரலாற்றுப் புகழைப் பெறுகிறார்.
     ஆஸ்திரேலியாவில் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணிக்கும், போர்ட் அடிலெய்டு அணிக்கும் இடையேயான 2 நாள் ஆட்டம் சனிக்கிழமை தொடங்குகிறது. ஆடவர்கள் அணிக்கான இந்தப் போட்டியில் வடக்கு மாவட்டங்கள் கிளப்புக்காக 8ஆவது பேட்ஸ்வுமனாக சாரா டெய்லர் விளையாட உள்ளார்.
     இவர், ஐசிசியின் மகளிருக்கான சர்வதேச ஒரு நாள் போட்டியில் நடப்பு ஆண்டின் சிறந்த வீராங்கனை என்ற பட்டத்தைத் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
     இவர் இதுவரையில் 8 டெஸ்ட் போட்டிகளிலும், 98 ஒரு நாள் போட்டிகளிலும், 73 டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணிக்காக விளையாடியுள்ளார். சாரா டெய்லர் ஆடவர்கள் அணியில் ஆடுவது இது முதல்முறையல்ல. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிமிங்கம் மற்றும் மாவட்ட பிரீமியர் லீக் போட்டியில் வால்ம்லி அணிக்காக விளையாடியுள்ளார்.
     இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் கிளப்பின் பொது மேலாளர் பாட் ஹோவர்ட் கூறுகையில், "சாரா டெய்லர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது, இதர மகளிர் வீராங்கனைகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கும்' என்றார்.
     இந்தப் போட்டி தொடங்கப்பட்ட 1987ஆம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த ஒரு ஆட்டத்திலும் பெண்கள் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai