Enable Javscript for better performance
ஷாங்காய் மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் ஜோகோவிச், நடால், முர்ரே- Dinamani

சுடச்சுட

    

    ஷாங்காய் மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் ஜோகோவிச், நடால், முர்ரே

    By  ஷாங்காய்,  |   Published on : 17th October 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    22

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் "ஷாங்காய் மாஸ்டர்ஸ்' டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால், ஆண்டி முர்ரே ஆகியோர் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
     முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்னார்ட் டோமிக்கை எதிர்கொண்டார், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பிய வீரர் ஜோகோவிச். இதில், 7-6, 6-1 என்ற செட் கணக்கில் டோமிக்கை அவர் தோற்கடித்தார்.
     மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்தித்தார், பிரிட்டனின் ஆண்டி முர்ரே. இதில், முர்ரே உலகத் தரவரிசையில் 3ஆவது இடத்திலும், தாமஸ் 5ஆவது இடத்திலும் உள்ளனர். இந்த ஆட்டத்தில் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் தாமûஸத் தோற்கடித்தார் முர்ரே.
     இதனிடையே, உலகத் தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் சுவிட்ஸர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார் காலிறுதியின் மற்றொரு ஆட்டத்தில் எதிர்கொண்டார் உலகத் தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருக்கும் நடால்.
     இருவருக்கும் இடையேயான ஆட்டம் 64 நிமிடங்கள் நீடித்தது. இதில், 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்காவை வீழ்த்தினார் நடால். நடால் தனது அரையிறுதியில் பிரான்ஸின் ஜோ வில்ஃப்ரைடு சோங்காவை சந்திக்கிறார். மற்றொரு அரையிறுதியில் ஜோகோவிச்சும், ஆண்டி முர்ரேயும் மோதுகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai