சுடச்சுட

  

  251-இல் சுருண்டு "ஃபாலோ ஆன்' ஆனது மேற்கிந்தியத் தீவுகள்

  By  காலே,  |   Published on : 17th October 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  21

  இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
   அதையடுத்து, "ஃபாலோ ஆன்' பெற்று தனது இரண்டாவது இன்னிங்ûஸத் தொடங்கியது.
   முன்னதாக, மூன்றாம் நாளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராவோ 15 ரன்களுடனும், சாமுவேல்ஸ் 7 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர். எனினும், சாமுவேல்ஸ் 11 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார்.
   மறுமுனையில், பிராவோ அரை சதம் அடித்தார். இதற்குள்ளாக, சாமுவேல்ûஸத் தொடர்ந்து வந்த பிளாக் வுட்டும் அவரைப் போலவே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராம்தின் களமிறங்கினார்.
   இந்நிலையில், நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிராவோ அரை சதத்துடனேயே தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டார். ரங்கணா ஹெராத் வீசிய பந்தை சண்டிமாலிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட்டானார். இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாறத் தொடங்கியது.
   அடுத்து வந்த விக்கெட்டுகள் அனைத்தும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தன. ராம்தின் 23 ரன்களிலும், ஹோல்டர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
   ரோச் 22 ரன்களும், டெய்லர் 31 ரன்களும் அடித்தனர். கேப்ரியல் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி 251 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வீழ்ந்தது. அந்த அணியின் பிஷு மட்டும் 23 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
   மொத்தமாக, இலங்கை அணியின் ஹெராத் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பிரசாத் 2 விக்கெட்டுகளும், பிரதீப், கெüஷல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்தியிருந்தனர்.
   இரண்டாவது இன்னிங்ஸ்: இதையடுத்து, ஃபாலோ ஆன் முறையில் தனது இரண்டாவது இன்னிங்ûஸத் தொடங்கியது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
   இந்த முறையும் பிராட்வைட் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹோப் நம்பிக்கையளிக்காமல் 6 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார்.
   இதனால், இரண்டாவது இன்னிங்ûஸயும் மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாற்றத்துடனே தொடங்கியுள்ளது.
   மூன்றாம் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிராவோ 20 ரன்களுடனும், பிஷு 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியின் ஹெராத்தும், ஸ்ரீவத்தும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai