சுடச்சுட

  

  ஐஎஸ்எல் கால்பந்து போட்டி:ஜாக்கிசந்தின் முயற்சியால் கொல்கத்தாவை வீழ்த்தியது புணே

  By புணே  |   Published on : 18th October 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  isllogo

  இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஜாக்கிசந்த் சிங் கோல் அடித்து உதவ, எஃப்சி புணே சிட்டி, 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

  ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 14-ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின.

  தில்லி டைனமோஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் புணே வீரர்கள் வெற்றியை இழந்ததால் இந்த முறை அணியின் பயிற்சியாளர் டேவிட் பிளாட் 5 வீரர்களை மாற்றி களமிறக்கினார். இந்த நடவடிக்கைக்கு ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்திலேயே பலன் கிடைத்தது. வலது ஓரத்திலிருந்து சக அணி வீரர் அடித்த பந்தை முன்னோக்கி ஓடிவந்து ஜாக்கிசந்த் சிங், இடது காலால் உதைத்தார். அது, எதிரணியின் கோல் கீப்பர் கலட்டாயுட்டின் கட்டுப்பாட்டை கடந்து கோல் வலைக்குள் புகுந்தது.

  தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் உள்ளூர் அணியான புணே வீரர்கள் அபாரமாக விளையாட, கொல்கத்தா அணியினர் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர மிகுந்த சிரமப்பட்டனர். 22 ஆவது நிமிடத்தில் துன்கே சன்லி அடித்த பந்து கம்பத்தில் பட்டு விலகியதால் புணேவின் 2-ஆவது கோல் முயற்சி விரயமானது.

  இதேபோல 41-ஆவது நிமிடத்தில் லிங்டாஹ் முயற்சியை கொல்கத்தா கோல் கீப்பர் முறியடித்தார். இதனால் முதல்பாதிக்கு முன்பாக புணே அணி இரண்டு கோல் வாய்ப்புகளை தவறவிட்டது.

  2-ஆவது பாதியில் புணே அணியினர் தங்களது முன்னிலையை தக்க வைக்கும் முனைப்பில் விளையாடினர். சன்லிக்கு மீண்டும் ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையும் அவர் அடித்த ஷாட்டில் பந்து கம்பத்தில் பட்டு விலகிச் சென்றது.

  நடப்புச் சாம்பியன்களான கொல்கத்தா அணி வீரர்கள், குறைந்தபட்சம் ஆட்டத்தை சமன் செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் நெருக்கடியுடன் விளையாடினர். அதன் ஒரு முயற்சியாக 80-ஆவது நிமிடத்தில் இயான் ஹியூமி அடித்த பந்தை புணே அணியின் கோல் கீப்பர் சைமன்சென் எளிதாக தடுத்தார். இந்த ஆட்டத்தில் சைமன்சென்னுக்கு அதிக வேலை கொடுக்காதவாறு அவரது அணியினர் எதிரணி எல்லையை முற்றுகையிட்டனர். கொல்கத்தாவின் முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவே இல்லை. இதனால் ஆட்டநேர முடிவில் புணே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி, 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. கொல்கத்தா அணி, 4 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் தலா ஒரு தோல்வி, டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

   

  ஐஎஸ்எல் கால்பந்து போட்டி:இன்றைய ஆட்டம்

  கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி

  தில்லி டைனமோஸ் எஃப்சி

  நேரம் : இரவு 7 மணி, இடம்: கொச்சி

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai