Enable Javscript for better performance
சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி:இறுதிச் சுற்றில் இந்தியா - பிரிட்டன் இன்று மோதல்- Dinamani

சுடச்சுட

    

    சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி:இறுதிச் சுற்றில் இந்தியா - பிரிட்டன் இன்று மோதல்

    Published on : 18th October 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐந்தாவது சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியா - பிரிட்டன் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

    5-ஆவது சுல்தான் ஜோஹர் கோப்பை ஆடவர் ஹாக்கித் தொடர் மலேசியாவின் ஜோஹர் பாருவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் சனிக்கிழமை மோதியது. ஆஸ்திரேலிய அணி, தடுப்பு ஆட்டத்தில் தீவிரமாக கவனம் செலுத்தியதால் முதல் பாதி கோல் இன்றி நகர்ந்தது. இரண்டாவது பாதியில் அந்த அணி தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தியது.

    ஆனால், அதில் சிறப்பாக செயல்படமுடியாததால் மீண்டும் தடுப்பாட்ட உத்திக்கு மாறியது. இதற்கிடையே 42-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கைப் பயன்படுத்தி இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் ஆட்டத்தின் முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கூடுதலாக கோல்கள் எதுவும் விழவில்லை. இதனால், ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பிரிட்டனுடன் மோதுகிறது. இத்தொடரில் தொடர்ந்து 2 முறை சாம்பியனாக வலம் வரும் இந்திய அணி, 3-ஆவது முறையாகவும் சாம்பியனாகும் முனைப்பில் உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai