சுடச்சுட

  
  eng

  இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

  இங்கிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, அபு தாபியில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் 245 ரன்கள் விளாச, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் குக், 263 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தார். இதனால், இங்கிலாந்து 206 ஓவர்களில் 598 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

  பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான், கடைசி நாளான சனிக்கிழமை 173 ரன்களில் ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் ஆதில் ரஷீத் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

  இதனால் இங்கிலாந்து அணிக்கு 99 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டிங் செய்த அந்த அணி ஆட்டநேர முடிவில், 11 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கு இன்னும் 25 ரன்களே தேவை என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் இப்போட்டி டிரா ஆனது. குக் ஆட்டநாயகனாக தேர்வானார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai