சுடச்சுட

    
    Sindhu

    டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலின் மரினை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி, டென்மார்க் நாட்டின் ஓடென்சி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனை ஸ்பெயினின் கரோலின் மரினை எதிர்கொண்டார்.

    ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில், உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, 21-15, 18-21, 21-17 என்ற செட் கணக்கில் கரோலினை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

    20 வயதான ஹைதராபாதை சேர்ந்த சிந்து, தனது இறுதிச் சுற்றில், முன்னாள் உலகச் சாம்பியனும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியினுமான சீனாவின் லீ சூரூயை எதிர்கொள்கிறார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் லீ சூரூய், போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்திலுள்ள கொரியாவின் சுங் ஜி யுன்னை 21-8, 20-22, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை உறுதிச் செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai