சுடச்சுட

    

    திண்டுக்கல்லில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் தொடக்கம்

    By திண்டுக்கல்  |   Published on : 18th October 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dglyoga

    தமிழ்நாடு மாநில 28 ஆவது யோகாசனப் போட்டிகள், திண்டுக்கல்லை அடுத்துள்ள எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கத்தின் தலைவர் கோ. சுந்தரராஜன், போட்டிகளை தொடக்கி வைத்தார். 40 ஆவது தேசிய போட்டிக்கான தேர்வு முகாமாகவும் நடைபெற்று வரும் இப்போட்டிகளில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

    இதில், 8 முதல் 11 வயதுக்குள்பட்டோர், 11-14, 14-17, 17-21, 21-25, 25-35 மற்றும் 35 வயதுக்கு மேற்பட்டோர் என 6 பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில் 1000-க்கும் மேற்

    பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, கர்நாடக மாநிலம் மங்களூரில் 2016 ஜனவரி 10 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்று போட்டிகளுக்குப் பின்னர், தேசியப் போட்டிகளுக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும் என யோகாசன சங்கத்தின் பொதுச் செயலர் யோகிராஜ் நீ. ராமலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யோகா கற்பதன் மூலம் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மாணவப் பருவத்தில் யோகா கற்றுக் கொண்டவர்கள், எதிர்காலத்தில் லஞ்சம், ஊழல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள். சமுதாய முக்கியத்துவம் கருதி, அனைத்து கிராமங்களிலும் யோகா பள்ளி தொடங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால், சமுதாய ஒழுக்கம் மேம்படுவதோடு, மருத்துவச் செலவையும் குறைக்க முடியும் என்றார். ஏற்பாடுகளை, திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கத்தின் செயலர் வெ. ராஜகோபால் செய்து வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai