சுடச்சுட

    

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்:வெற்றியைத் தக்க வைக்குமா இந்தியா?

    By ராஜ்கோட்  |   Published on : 18th October 2015 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை களம் காணுகிறது.

    இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கான்பூரில் கடந்த 11ஆம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, இந்தூரில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் போட்டியில், தோனியின் சிறப்பான ஆட்டத்தால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இத்தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்து வரும் நிலையில் 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி: டி-20 தொடர், அதைத் தொடர்ந்து முதல் ஒரு நாள் போட்டி என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி வரிசையாக தோல்வியைத் தழுவியதால் கேப்டன் தோனியை முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

    இந்த சூழலில் 2-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த நேரத்தில் பந்துவீச்சாளர்களின் உதவியோடு நிதானமாக விளையாடிய தோனி, 86 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    பின்னர் பந்துவீச்சின் போது, தனது வியூகத்தால் எதிரணியை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். இதனால், தோனியை விமர்சனம் செய்தவர்கள் தற்போது மௌனம் காக்கத் தொடங்கியுள்ளனர்.

    இந்திய பேட்டிங்கைப் பொருத்த வரை விராட் கோலி, ஷிகர் தவண், சுரேஷ் ரெய்னா ஆகியோர் அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்து வருகின்றனர். இந்த ஆட்டத்திலாவது அவர்கள் சரியான முறையில் கடமையாற்ற வேண்டும்.

    கடந்த ஆட்டத்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் முதலில் ரன்களை வாரி இறைத்தாலும், அதன் பின்னர் அக்ஷர் படேல், ஹர்பஜன் சிங் ஆகியோர் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். இவர்களைப் பார்த்து பின்னர் வேகப் பந்துவீச்சாளர்களும் கட்டுப்பாடாக பந்துவீசினர்.

    முந்தைய ஆட்டங்களை விட இந்த முறை எதிரணி பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் திணறடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவல்.

    இந்திய வீரர்கள் தீவிரம்: தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை கேப்டன் டி வில்லியர்ஸ், ஃபாப் டுபிளெஸ்ஸிஸ், ஆகியோர் மேல் வரிசையில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மற்ற இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களான ஹஷிம் ஆம்லா, டேவிட் மில்லர் ஆகியோர் ஜொலிக்காதது அந்த அணியினருக்கு ஏமாற்றம் அளிக்கும் விஷயமாகும்.

    டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கன், ககிசோ ரபடா ஆகியோர் வேகப்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இம்ரான் தாஹிர், ஜே.பி.டுமினி ஆகியோர் ரன்களை அதிகமாக வழங்கிவிடுவது அந்த அணிக்கு கவலையளிக்கும் விஷயம். இந்த முறை இத்தகைய குறைகளை களைந்து இந்திய அணிக்கு சவால் அளிக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளனர்.

    அதேநேரத்தில் சொந்த மண்ணில் வெற்றி நடையை தொடரும் முனைப்பில் இந்திய வீரர்களும் தீவிரமாக உள்ளனர்.

    ஹார்திக் படேல் போராட்டம்:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வரும் பட்டிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி (பிஏஏஎஸ்) இயக்கத்தின் அமைப்பாளர் ஹார்திக் படேல் உள்ளிட்ட போராட்ட குழுவினர், இப்போட்டியின் போது மைதானத்தில் அமர்ந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று முதலில் அறிவித்தனர்.

    இதனால், உஷாரான சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தினர் மைதானத்தின் நுழைவுச்சீட்டு விற்பனையில் கெடுபிடி காட்டினர். இதன் ஒரு பகுதியாக நுழைவுச் சீட்டுகளின் விற்பனை குறைக்கப்பட்டது. இந்நிலையில், இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரும் வழியில் போராட்டம் நடத்தப் போவதாக ஹார்திக் படேல் அறிவித்துள்ளார். இதனால், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக மைதானத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்

    பட்டுள்ளன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai