சுடச்சுட

  

  பிசிசிஐ செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது:முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை

  By மும்பை  |   Published on : 18th October 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த அதன் செயற்குழு கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஏலத்தின் மூலம் புதிதாக இரு அணிகளை தேர்வு செய்ய பிசிசிஐ-யின் செயற்குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், 2 ஆண்டுகள் கழித்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் தடை முடிந்த பின்னர் மீண்டும் போட்டிக்குத் திரும்பினால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். இந்த பிரச்னை மற்றும் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது, கட்டாக்கில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-ஆவது டி-20 போட்டியில் ரசிகர்கள் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசியது ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பிசிசிஐ-யின் புதிய தலைவராக சஷாங் மனோகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமையில் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai