Enable Javscript for better performance
ரஞ்சி கிரிக்கெட்:இரண்டாவது இன்னிங்ஸில் தமிழகம் தடுமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ரஞ்சி கிரிக்கெட்:இரண்டாவது இன்னிங்ஸில் தமிழகம் தடுமாற்றம்

    By மும்பை  |   Published on : 18th October 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் தமிழக அணி தடுமாறி வருகிறது.

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சுற்றில் தமிழகம், மும்பை அணியுடன் விளையாடி வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் பிறகு பேட்டிங்கை தொடங்கிய தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 434 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை, 294 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்நிலையில் 140 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கிய தமிழக அணி, விஷால் தபோல்கரின் (5/41) பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் தமிழகம், 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. மாலோலன் ரங்கராஜன் 15 ரன்களுடனும், அஸ்வின் கிறிஸ்ட் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai