சுடச்சுட

    

    டென்மார்க் ஓபன் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் சிந்து தோல்வி

    Published on : 19th October 2015 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    28

    டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியா வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் லீ சூரூயிடம் தோல்வியடைந்தார்.
     டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் டென்மார்க் நாட்டின் ஓடென்சி நகரில் நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் லீ சூரூயுடன் மோதினார். சுமார் 47 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 21-19, 21-12 என்ற செட் கணக்கில் முன்னாள் உலகச் சாம்பியனும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான லீ சூரூய் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற சிந்து, சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai