சுடச்சுட

    

    பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடருக்கு எதிர்ப்பு: பிசிசிஐ அலுவலகத்தில் சிவசேனா தொண்டர்கள் ரகளை!

    By DN  |   Published on : 19th October 2015 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மும்பையிலுள்ள பிசிசிஐ அலுவலகத்தில் சிவசேனா தொண்டர்கள் அத்துமீறி நுழைந்து ரகளை செய்ததால் பிசிசிஐ - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே இன்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கானுக்கு பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர் அழைப்பு விடுத்தார். இன்று இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை, மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் சிவசேனா தொண்டர்கள் அத்துமீறி புகுந்து ரகளை செய்தார்கள். பாகிஸ்தானுடனான எந்த ஒரு கிரிக்கெட் தொடரையும் அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பினார்கள்.

    இந்தச் சம்பவத்தையடுத்து பிசிசிஐ - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai