Enable Javscript for better performance
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி, தோல்வியைத் தழுவியது.
     ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் - மும்பை அணிகள் "பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு அணிகளிடையிலான போட்டி மும்பையில் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழகம் 434 ரன்களும், மும்பை அணி 294 ரன்களும் எடுத்தன. 2-ஆவது இன்னிங்ஸில் விஷால் தபோல்கர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி உதவியதால், தமிழக அணி 95 ரன்களில் சுருண்டது. இதனால், எதிரணிக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 60.4 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. இதன் மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் இதுவரை தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் மும்பை அணி 14 புள்ளிகளும், தமிழக அணி 9 புள்ளிகளும் பெற்றுள்ளன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai