சுடச்சுட

    
    20spt3

    இந்திய ஹாக்கி அணியில் வீரர்களிடையே பிளவை ஏற்படுத்துவதாக கூறி குர்பஜ் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தடைவிதித்தது.

    பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் கடந்த ஜூன் மாதம் நடந்த உலக ஹாக்கி லீக் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் நடுக்கள வீரர் குர்பஜ் சிங் (27), சக அணியினரிடையே பிளவை ஏற்படுத்தும் விதமாகவும், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் பயிற்சியாளர் ஜுடி பிலிக்ஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தி தனது அறிக்கையை ஹாக்கி இந்தியா அமைப்பிடம் சமர்ப்பித்தார்.

     அதன் அடிப்படையில் ஹாக்கி இந்தியா அமைப்பு, குர்பஜ்சிங்குக்கு 9 மாதம் தடைவிதித்து நடவடிக்கை எடுத்தது.  இதனால் அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஹாக்கி இந்தியா லீக் மற்றும் உலக ஹாக்கி லீக் இறுதி போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அவர் இதுதொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின், குர்பஜ்சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டார். 

    இருப்பினும் நீதிமன்ற உத்தரவு கிடைத்த ஒரு வாரத்துக்குள் ஹாக்கி இந்தியா அமைப்பின் வீரர்கள் குறைதீர்க்கும் குழு கூட்டத்தில் இது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்பட உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai