சுடச்சுட

    

    "சாமுவேல்ஸின் பந்துவீச்சு சந்தேகமளிக்கிறது': ஐசிசியிடம் நடுவர்கள் புகார்

    By DN  |   Published on : 20th October 2015 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20spt4

    மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸின் பந்துவீச்சு சந்தேகமளி க்கிறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

    இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் 6 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

    இதில் மேற்கிந்தியத் தீவுகளின் மார்லன் சாமுவேல்ஸ் 27 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இப்போட்டியில் இவரது பந்துவீச்சு சந்தேகமளிப்பதாக நடுவர்கள் ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளனர்.

    இதனால், 14 நாள்களுக்குள் சாமுவேல்ஸ் பந்துவீச்சு ஆய்வுக்கு உட்பட வேண்டும். அதன் முடிவு வரும் வரை அவர் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவார். 2000-ஆம் ஆண்டில் அறிமுகமான சாமுவேல்ஸ், பந்துவீச்சு சர்ச்சையில் சிக்குவது இது 3-ஆவது முறையாகும். ஏற்கெனவே, கடந்த 2008ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக சிக்கினார். அதன் பிறகு தனது பந்துவீச்சு முறையை திருத்தி மீண்டும் விளையாடினார்.

    பின்னர், 2013 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் சர்ச்சைக்குள்ளான முறையில் பந்துவீசினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai