சுடச்சுட

    

    சிவசேனை ரகளை எதிரொலி: பாதுகாப்புக்காக பாகிஸ்தான் நடுவர் விடுவிப்பு

    By DN  |   Published on : 20th October 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20spt1

    மும்பை பிசிசிஐ அலுவலகத்தில் சிவசேனை கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதன் எதிரொலியாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-ஆவது ஒரு நாள் போட்டிக்கான நடுவர் அலீம் தாரை பாதுகாப்பு காரணம் கருதி ஐசிசி விடுவித்துள்ளது.

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் சிவசேனா கட்சியினர் திங்கள்கிழமை ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் ஐசிசி நடுவராக செயல்பட்டு வருகிறார். மும்பையில் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள 5-ஆவது ஒரு நாள் போட்டிக்கான நடுவர் பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று நடுவர் பின்னர் அறிவிக்கப்படுவார்.

    பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே அலீம் தார் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஐசிசி செய்தி தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

    இந்நிலையில் பிசிசிஐ அலுவலகத்துக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐசிசி தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஜாகீர் அப்பாஸ் திங்கள்கிழமை கூறியதாவது:

    இது போன்ற போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. நீண்டகாலமாக இது நடக்கிறது. ஆனால், ஐசிசி-யின் தலைவராக நான் விரும்புவது என்னவென்றால் கிரிக்கெட், உலகம் முழுவதும் விளையாடப்பட வேண்டும். அரசியல், கிரிக்கெட் இரண்டும் வெவ்வேறானவை. தங்களது நாட்டில் வந்து விளையாடுமாறு இந்தியாவை பாகிஸ்தான் கோரவில்லை. இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் விளையாடவே அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்காக மொத்த உலகமும் காத்திருக்கிறது. இதுவிஷயத்தில் இந்தியா நல்ல செய்தியை சொல்லும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai