சுடச்சுட

    

    சிவசேனை ரகளை எதிரொலி: வர்ணனையாளர் பணியிலிருந்து வாசிம் அக்ரம் & சோயிப் அக்தர் விடுவிப்பு!

    By DN  |   Published on : 20th October 2015 02:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    akram

    பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு எதிராக சிவசேனை தொண்டர்கள் ரகளை செய்ததன் எதிரொலியாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் வர்ணனையாளர்களாகப் பணியாற்றி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த வாசிம் அக்ரமும் சோயிப் அக்தரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

    இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கானுக்கு பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர் அழைப்பு விடுத்தார். நேற்று இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் சிவசேனா தொண்டர்கள் அத்துமீறி புகுந்து ரகளை செய்தார்கள். பாகிஸ்தானுடனான எந்த ஒரு கிரிக்கெட் தொடரையும் அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பினார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து பிசிசிஐ - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் ஐசிசி நடுவராக செயல்பட்டு வருகிறார். சிவசேனை தொண்டர்களின் ரகளையின் விளைவாக, மும்பையில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள 5-வது ஒரு நாள் போட்டிக்கான நடுவர் பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே அலீம் தார் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஐசிசி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாசிம் அக்ரமும் சோயிப் அக்தரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் வர்ணனையாளர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களும் மும்பையில் நடக்கும் ஒருநாள் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் 4-வது கிரிக்கெட் போட்டிக்கு இருவரும் வர்ணனையாளர்களாக செயல்படுவார்கள். அதன்பிறகு மும்பை போட்டிக்கு முன்பு இருவரும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai