சுடச்சுட

  
  20spt2

  சர்வதேச டென்னிஸ் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி முதல் முறையாக நூறு இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

  சர்வதேச டென்னிஸ் சங்கம் அண்மையில் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய இளம் வீரர் யுகி பாம்ப்ரி (23), 99-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடைசி 3 ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் யுகி பாம்ப்ரி ஷாங்காய் சேலஞ்சரில் சாம்பியன் பட்டமும், தைவான் போட்டியில் 2-ஆவது இடமும், தஷ்கென்ட் போட்டியில் அரையிறுதி வரையிலும் முன்னேறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

  இதேபோல, சாகேத் மைனேனி 161-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சோம்தேவ் தேவ்வர்மன் 181-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

  ஆடவர் இரட்டையர் தரவரிசையில் ரோஹன் போபண்ணா 15-ஆவது இடத்திலும், லியாண்டர் பயஸ் 36-ஆவது இடத்திலும் உள்ளனர்.

  பூரவ் ராஜா 96-ஆவது இடத்தில் உள்ளார். மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா தொடர்ந்து முதலிடத்தை அலங்கரிக்கிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai