Enable Javscript for better performance
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் சாம்பியனாகும் முனைப்பில் சாய்னா, சிந்து- Dinamani

சுடச்சுட

    

    பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் சாம்பியனாகும் முனைப்பில் சாய்னா, சிந்து

    By DN  |   Published on : 20th October 2015 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20spt6

    பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியனாகும் முனைப்பில் இந்தியா வீராங்கனைகள் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டிகள், பாரீஸில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் நாளில் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்துகொள்கிறார். அண்மையில் முடிந்த டென் மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் சீனா வீராங்கனை லீ சூரூயிடம் சிந்து தோல்வியடைந்தார். இருப்பினும் முதல் முறையாக சூப்பர் சீரிஸ் போட்டியில் இறுதிச் சுற்றை எட்டிய அவர், சிறந்த ஃபார்மில் உள்ளார். சிந்து தனது முதல் சுற்றில் சீனாவின் வங் ஷிக்ஷியானை எதிர்கொள்கிறார்.

    இதே போல உலகின் நம்பர்.1 நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால், காமன்வெல்த் சாம்பியனான கனடாவின் மிச்செல்லி லீயுடன் மோதுகிறார். முன்னதாக ஓடென்சி நகரில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் போட்டியில் 2-ஆவது சுற்றுடன் வெளியேறிய சாய்னா, இந்த முறை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்பில் உள்ளார்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்திலுள்ள இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் டியான் ஹுவேயுடன் மோதுகிறார். எச்.எஸ்.பிரணாய், பாரப்பள்ளி காஷ்யப் ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

    மகளிர் இரட்டையர் பிரிவில், 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் சாம்பியனான ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி, தாய்லாந்தின் ஜாங்கோல்பன் - ராவிந்தா பிரஜோங்ஜெய் ஜோடியை எதிர்கொள்கிறது.

    தகுதிச் சுற்றில் சாய் பிரணீத், சீனாவின் ஜு வெய் வங்கையும், டச்சு ஓபன் சாம்பியனான அஜய் ஜெயராம் உள்ளூர் வீரரான தாமஸ் ரூக்ஸலையும் எதிர்கொள்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai