சுடச்சுட

  

  புதிய திருப்பம்? காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து டுமினி விலகல்!

  By DN  |   Published on : 20th October 2015 02:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  duminy1

  ராஜ்கோட்டில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர் ஜேபி டுமினி-க்குக் கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவர் சென்னை, மும்பையில் நடக்க உள்ள ஒருநாள் போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டார். அவருக்குப் பதிலாக டேன் எல்கர் அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  டுமினியின் காயம் குணமாக எப்படியும் 2 வாரங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 5 அன்று முதல் டெஸ்ட் தொடங்குகிறது. அதற்குள் அவர் குணமாகிவிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மீதமுள்ள இரு ஒருநாள் போட்டிகளிலும் டுமினியால் பங்கேற்க முடியாமல் போவது தென் ஆப்பிரிக்க அணிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. பேட்டிங்கில் அவர், முதல் டி20 போட்டியில் இருந்து பிரமாதப்படுத்தி வருகிறார். பவுலிங்கில் 5-வது பவுலராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் முக்கியமான இரு போட்டிகளிலும் கலந்துகொள்ளமுடியாமல் போவது இந்திய அணிக்கு திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai