சுடச்சுட

    

    ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தைப் பார்த்ததில்லை; ஆனால் சேவாக் அதிரடியாக ஆடி பார்த்துள்ளேன்: தோனி பெருமிதம்!

    By DN  |   Published on : 20th October 2015 04:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விரேந்திர சேவாக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்திய கேப்டன் தோனி தன் ட்விட்டர் பக்கத்தில் சேவாக் பற்றி குறிப்பிட்டதாவது:

    விவியன் ரிச்சர்ட்ஸ் ஆடி நான் பார்த்ததில்லை. ஆனால் பெருமையாகச் சொல்வேன். பந்துகளை நொறுக்கியெடுத்த விரேந்திர சேவாக்கின் ஆட்டத்தை நான் பார்த்துள்ளேன். பேட்டிங்கில் திறமை இருப்பது ஒரு விஷயம். ஆனால் சேவாக்கின் மனநிலையுடன் ஆடுவது மிகவும் கடினமானது. பலர் சேவாக்கைப் போல ஆட முயல்வார்கள். ஆனால் உங்கள் இயல்பான பேட்டிங்கைத் தொடர்வதுதான் நல்லது. அருமையான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai