சுடச்சுட

    
    sewak

    சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கப்போவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்தார்.

    ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளன. அதற்கான அறிமுக விழா துபையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    அதில் சேவாக், பிரையன் லாரா, கிரீம் ஸ்மித், அஸார் முகமது உள்ளிட்ட முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாமல், மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் எவ்வாறு பங்கேற்பீர்கள்? என சேவாக்கிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    ஒருவேளை சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், மாஸ்டர்ஸ் லீக் போட்டிகளில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்த சேவாக், இந்தியாவுக்குச் சென்ற பின் ஓய்வு குறித்து அறிவிப்பேன் என்றார்.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பல பேட்ஸ்மேன்கள் களமிறங்கியிருந்தாலும், தனக்கே உரிய அதிரடி ஆட்டத்தின் மூலம்  தனியிடத்தைப் பிடித்தவர் சேவாக்.

    டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் அவர்.

     மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சேவாக், 23 சதங்கள், 32 அரை சதங்கள் விளாசி மொத்தம் 8,586 ரன்களைக் குவித்துள்ளார்.

    251 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,273 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 சதங்களும், 38 அரை சதங்களும் அடங்கும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai