சுடச்சுட

    

    இந்தியா-பாகிஸ்தான் தொடருக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு: சஹாரியார் கான்

    By DN  |   Published on : 21st October 2015 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sahari

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடருக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சஹாரியார் கான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

    பிசிசிஐ செயலர் ராஜீவ் சுக்லாவை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்ததை அடுத்து, சஹாரியார் கான் இவ்வாறு கூறியுள்ளார். இது அதிகாரப்பூர்வ சந்திப்பு அல்ல என்று இருதரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அப்போது தொடர் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் விவகாரத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இயலாத வகையில் பிசிசிஐக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    இரு நாட்டு அணிகள் பங்கேற்கும் தொடருக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது. சந்திப்பு தொடர்பாக பிசிசிஐயிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. இனி இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்போவதில்லை.

    இந்தத் தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை காத்திருக்க வைப்பது நியாயமல்ல. ராஜீவ் சுக்லாவை நீண்ட காலமாக அறிந்திருந்த காரணத்தால் அவரது வீட்டில் அவரைச் சந்தித்தேன். இது பிசிசிஐயுடனான சந்திப்பு அல்ல.

    எனினும், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டியை புறக்கணிப்பதாகக் கூறவில்லை. தற்போதைக்கு பாகிஸ்தான் திரும்புகிறேன் என்று சஹாரியார் கான் கூறினார்.

    ராஜீவ் சுக்லா: இந்த சந்திப்பு குறித்து பிசிசிஐ செயலர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "சாஹாரியார் கானுடனான சந்திப்பு மரியாதை அடிப்படையிலானது. அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் இறுதி முடிவு மேற்கொள்வார்.

    இந்தத் தொடர் நடைபெறுமா நடைபெறாதா, அது எங்கு நடைபெறும், எவ்வாறு நடைபெறும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைக்குப் பிறகே முடிவு செய்யப்படும்' என்றார்.

    முன்னதாக, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட எதிர்ப்புத் தெரிவித்து சிவசேணை கட்சியினர் பிசிசிஐ அலுவலகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டதை அடுத்து, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இடையேயான பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை தில்லியில் நடைபெறுவதாக இருந்தது.

     

    ஜேட்லியை சந்திக்க முயற்சி

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்திப்பதற்கான அனுமதி கோரி முயன்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தொடர் விவகாரம் குறித்து கலந்தாலோசிக்க அருண் ஜேட்லியை சந்திக்க முயற்சித்து வருகிறேன். என்னுடன் இந்திய வந்த நஜீம் சேத்தி, தற்போது துபைக்கு சென்றுள்ளார்' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai