சுடச்சுட

  
  narth

  ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் 16ஆவது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியிடம் போராடி வீழ்ந்தது சென்னையின் எஃப்சி அணி.

  இந்த ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்.

  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆடின. இரு அணிகளுமே தீவிர கோல் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இரு அணிகளுக்குமே ஆட்டத்தின் பாதி நேரம் வரையில் கோல் ஏதும் கிடைக்கவில்லை.

  இதையடுத்து, இடைவேளைக்குப் பிறகும் இதே நிலை நீடித்தது. ஏறக்குறைய ஆட்டம் முடிவடையும் நேரம் (90) நெருங்கியது.

  இந்நிலையில், ஆட்டம் முடிவடைய இருந்த 90ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி மூலம் நார்த்ஈஸ்ட் அணிக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது.

  அந்த அணியின் வீரர் ஒருவர் அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டுத் திரும்பியது. சக வீரர் ஒருவர் அதை கோலாக்க முயன்றபோது சென்னை வீரர் ஒருவர் அவர் மீது மோத, கள நடுவர் அதற்கு பெனால்ட்டி கொடுத்தார்.

  தனது அணிக்காக கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை எளிதான கோலாக மாற்றினார் நார்த்ஈஸ்ட் வீரர் சிமாவ். இந்நிலையில், ஆட்ட நேரம் 4 நிமிடம் அதிகரிக்கப்பட்டது. சென்னை அணி, தனக்கான கோல் கணக்கைத் தொடங்காமல் இருந்த நிலையில், நார்த்ஈஸ்ட் அணி தனது இரண்டாவது கோலை அடித்தது.

  இந்த முறை அந்தப் பெருமையை தனதாக்கிக் கொண்டார நிகோலஸ் வெலெஸ். இதற்குள்ளாக ஆட்ட நேரம் முடிந்ததால், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி.

   

  இன்றைய ஆட்டம்: மும்பை சிட்டி எஃப்சி-தில்லி டைனமோஸ்

  இடம்: நவி மும்பை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai