சுடச்சுட

  
  amithmisra

  இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு எதிராக பாலியல் வழக்கு பதிவு செய்துள்ள பெங்களூரு போலீஸார், விசாரணைக்கு ஆஜாராகக் கோரி அவருக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பினர்.

  இதுகுறித்து, காவல்துறை துணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறியதாவது:

  கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து அமித் மிஸ்ரா தனக்கு பாலியல் ரீதியாகத் துண்புறுத்தல் அளித்ததாகக் கூறி பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அமித் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக ஒரு வாரத்துக்குள் ஆஜராகுமாறு தற்போது அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளோம். அவர் ஆஜராகத் தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சந்தீப் பாட்டில் கூறினார்.

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அமித் மிஸ்ரா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai