சுடச்சுட

    

    இந்திய சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா மீதான புகாரை அவரது பெண் நண்பர் வாபஸ் பெற்றார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய வீரர்கள் பெங்களூரில் பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்தனர். அப்போது, இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, தங்கியிருந்த ஹோட்டலில், அவருக்கும் அவரது பெண் நண்பர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தான் தாக்கப்பட்டதாக மிஸ்ராவின் பெண் நண்பர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார், மிஸ்ராவின் மீது இரண்டு நாள்களுக்கு வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மிஸ்ராவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில் மிஸ்ரா மீதான புகாரை அவரது பெண் நண்பர் திரும்பப் பெற்றுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் மீண்டும் நண்பர்களாக இருக்க விரும்புகிறோம். இந்த வழக்கில் பிசிசிஐ உள்பட யாரும் எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. ஊடகங்கள் இந்த விஷயத்தில் காட்டிய முக்கியத்துவத்தை கண்டு வியந்தேன்' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai