சுடச்சுட

    

    சுப்பிரமணியன் சுவாமி - என். சீனிவாசன் திடீர் சந்திப்பு! சென்னை அணி தடை குறித்து ஆலோசனை?

    By DN  |   Published on : 23rd October 2015 12:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஐசிசி தலைவர் என். சீனிவாசனை அவருடைய இல்லத்தில் இன்று சந்தித்தார். சென்னைக்கு அணிக்கு எதிரான தடை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

    சென்னையிலிருந்து மும்பைக்குக் கிளம்பும் முன்பு இந்திய கேப்டன் தோனி, ஐசிசி தலைவர் என். சீனிவாசனை சென்னையிலுள்ள அவருடைய போட் கிளப் இல்லத்தில் இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றது. அதன்பிறகு சுப்பிரமணியன் சுவாமி - என். சீனிவாசன் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த 2 ஆண்டுகளுக்குப் புதிதாக இரு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. சூதாட்ட புகாரில் 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2018 ஐபிஎல் போட்டியில்தான் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படும். எனவே இந்த விவகாரம் குறித்து தோனி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருடன் சீனிவாசன் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் சென்னை அணி தடை குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai