சுடச்சுட

  
  dhoni1

  இந்திய கேப்டன் தோனி, ஐசிசி தலைவர் என். சீனிவாசனை அவருடைய இல்லத்தில் இன்று சந்தித்தார்.

  சென்னை - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே சென்னை நேற்று ஒருநாள் போட்டி நடந்தது. தொடரின் இறுதி ஒருநாள் போட்டி ஞாயிறு அன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து மும்பைக்குக் கிளம்பும் முன்பு இந்திய கேப்டன் தோனி, ஐசிசி தலைவர் என். சீனிவாசனை சென்னையிலுள்ள அவருடைய போட் கிளப் இல்லத்தில் இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றது. 

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த 2 ஆண்டுகளுக்குப் புதிதாக இரு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. சூதாட்ட புகாரில் 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2018 ஐபிஎல் போட்டியில்தான் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படும். எனவே இந்த விவகாரம் குறித்து தோனியுடன் சீனிவாசன் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai