சுடச்சுட

    

    துளிகள்

    * பாரீஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் வியாழக்கிழமை நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில் இந்திய வீரர் காஷ்யப், இங்கிலாந்தின் ராஜீவ் ஒளசெப்புடன் மோதினார். இதில் 21-11, 13-21, 4-2 என்ற செட் கணக்கில் ராஜீவ் முன்னிலையில் இருந்தபோது காஷ்யப் ஆட்டத்திலிருந்து விலகினார்.

    * பெங்களூரில் நடைபெற்று வரும் ஏர் ஏசியா ஓபன் டென்னிஸ் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், 7-6(7), 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலியின் அலெசான்ட்ரோ பெகாவிடம் தோல்வியைத் தழுவினார்.

    * இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவில்லை. தென் ஆப்பிரிக்கத் தொடர் முடிந்த பின்னர் எந்த நேரத்திலும் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    * பாதுகாப்பு குறைபாடு காரணமாக வங்கதேச சுற்றுப் பயணத்தை ஆஸ்திரேலிய அணி அண்மையில் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டி, இரண்டு டி-20 போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வே அணி அடுத்த மாதம் வங்கதேசம் செல்கிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai