சுடச்சுட

  
  dhoni22

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முடக்க சதி நடந்துள்ளது என்று ஐசிசி தலைவர் என். சீனிவாசனை அவருடைய இல்லத்தில் இன்று சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

  சென்னையிலிருந்து மும்பைக்குக் கிளம்பும் முன்பு இந்திய கேப்டன் தோனி, ஐசிசி தலைவர் என். சீனிவாசனை சென்னையிலுள்ள அவருடைய போட் கிளப் இல்லத்தில் இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றது. அதன்பிறகு சுப்பிரமணியன் சுவாமி - என். சீனிவாசன் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த 2 ஆண்டுகளுக்குப் புதிதாக இரு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. சூதாட்ட புகாரில் 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2018 ஐபிஎல் போட்டியில்தான் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படும். எனவே இந்த விவகாரம் குறித்து தோனி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருடன் சீனிவாசன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தெரிகிறது.

  சென்னைக்கு அணிக்கு எதிரான தடை குறித்து சீனிவாசனுடன் ஆலோசனை நடத்தியுள்ள சுப்பிரமணியன் சுவாமி இதுபற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முடக்க சதி நடந்துள்ளது. சென்னை வீரர்கள் மீது எந்தத் தவறும் இல்லை. தடையை நீக்க நீதிமன்றத்தில் வாதாடுவேன் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai