சுடச்சுட

    

    பாட்மிண்டன் போட்டி:தரவரிசையில் சாய்னா சறுக்கல்

    By புது தில்லி,  |   Published on : 23rd October 2015 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால், முதலிடத்தில் இருந்து சரிந்து 2-ஆவது இடத்தில் உள்ளார். ஸ்பெயினின் கரோலின் மரின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யூ.எஃப்), வியாழக்கிழமை புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் முதலிடத்திலிருந்து சறுக்கி 2-ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

    நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலின் மரின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் மற்றும் டென்மார்க் ஓபன் போட்டிகளில் சாய்னா முன்கூட்டியே வெளியேறியது அவரது தரவரிசை சரிவுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

    தற்போது 81,782 புள்ளிகளுடன் உள்ள சாய்னாவை விட மரின், 1630 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, 13-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

    இவரைத் தவிர மற்ற இந்திய வீரர்களும் தரவரிசையில் சரிவு கண்டுள்ளனர்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஒரு இடம் சரிந்து 6-ஆவது இடத்துக்கும், பாரப்பள்ளி காஷ்யப் 8-ஆவது இடத்திலிருந்து 10-ஆவது இடத்துக்கும் பின்தங்கியுள்ளனர்.

    எச்.எஸ். பிரணாய் ஒரு இடம் பின்தங்கி 17-ஆவது இடத்திலும், அஜய் ஜெயராம் ஒரு இடம் முன்னேறி 25-ஆவது இடத்திலும் உள்ளனர்.

    அண்மையில் முடிந்த டச்சு ஓபன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று வரை முன்னேறிய மனு அத்ரி - சுமீத் ரெட்டி ஜோடி, ஒரு இடம் உயர்ந்து 19-ஆவது இடத்திலும், மகளிர் பிரிவில் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஒரு இடம் சரிந்து 13-ஆவது இடத்திலும் உள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai