Enable Javscript for better performance
மிஸ்பா சதம்: முதல் நாளில் பாகிஸ்தான் 282/4- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிஸ்பா உல் ஹக் சதம் விளாச, முதல் நாளில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபு தாபியில் நடைபெற்று வருகிறது.

    இதன் முதல் போட்டி டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் 2-ஆவது போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

    முகமது ஹஃபீஸ் (19 ரன்கள்), சோயிப் மாலிக் (2 ரன்கள்) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் வந்த யூனிஸ்கான், தொடக்க வீரர் ஷான் மசூத்துடன் இணைந்து விக்கெட் சரிவை தடுத்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். மசூத் 54 ரன்களுடனும், யூனிஸ்கான் 56 ரன்களுடனும் வெளியேறினர்.

    இந்த டெஸ்ட் தொடருடன் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்துள்ள கேப்டன் மிஸ்பா உல் ஹக் நிதானமாக ஆடி சதம் விளாசினார். ஆஷாத் ஷஃபீக் அவருக்கு சிறந்த ஃபார்ட்னர்ஷிப்பை நல்கினார்.

    முதல் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி, 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. மிஸ்பா 102 ரன்களுடனும் (192 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்ஸர்) ஷஃபீக் 46 ரன்களுடனும் (93 பந்து) களத்தில் உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai