சுடச்சுட

    

    மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை தடுமாற்றம்

    By கொழும்பு,  |   Published on : 23rd October 2015 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் ஜோமல் வாரிக்கன் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் வியாழக்கிழமை தொடங்கியது. இலங்கை அணியில் கௌஷல் மெண்டிஸம், எதிரணியில் ஜோமல் வாரிக்கனும் அறிமுகமாகினர். முதல் நாளில் மே.இந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் இலங்கை அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக வாரிக்கன் 4 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். இலங்கை தரப்பில் மிலிண்டா ஸ்ரீவர்த்தனா மட்டும் நிதானமாக விளையாடி 68 ரன்கள் (111 பந்து) சேர்த்து ஆட்டமிழந்தார். 66 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் ஆட்டநேர முடிவில் 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. கிரயாக் பிரத்வெயிட் 4 ரன்களுடனும், தேவேந்திர பிஸ 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai