Enable Javscript for better performance
வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலம் :தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலம் :தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

    By சென்னை  |   Published on : 23rd October 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    BHAVANI

    பெல்ஜியத்தில் நடந்த வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற, தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவிக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    வெனிசூலா-பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்கெனவே அவருக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகையை முதல்வர் வழங்கியுள்ளார்.

    இது குறித்து, பவானிதேவிக்கு முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதம்:

    பெல்ஜியம் ஹென்ட் நகரத்தில் நடந்த 18-ஆவது வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தமிழகமும், இந்தியாவும் பெருமை கொள்ளத்தக்க சாதனையைச் செய்துள்ளீர்கள். இந்த அளப்பரிய சாதனையைச் செய்தமைக்காக, தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றமைக்காக, தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டியில் வென்ற தங்களுக்கும், உறுதுணையாக இருந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தச் சிறப்பு விருது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்களைத் சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன். எதிர்காலத்தில் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் மேலும் பல பெருமைகளையும், விருதுகளையும் கொண்டு வருவீர்கள் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

    முதல்வரிடம் கோரிக்கை: வெனிசூலா-பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்க வேண்டுமென முதல்வர் ஜெயலலிதாவுக்கு வீராங்கனை பவானிதேவி கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதியன்று அவருக்கு ரூ.3 லட்சத்தை உடனடியாக வழங்கிட ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, அந்தத் தொகை பவானி தேவிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai