சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ரன்கள்

    By  துபை,  |   Published on : 24th October 2015 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி, 378 ரன்கள் எடுத்தது.
     இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபையில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட் செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி, 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மிஸ்பா உல் ஹக் 102 ரன்களுடனும், ஆஷாத் சஃபீக் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 5-ஆவது பந்தில் மிஸ்பா முந்தைய நாள் ஸ்கோருடன் எல்பிடபிள்யூ ஆனார்.
     அடுத்து வந்த சர்பிராஸ் அஹமது 32 ரன்களிலும், மறுமுனையில் ஆடிய ஆஷாத் சஃபீக் 83 ரன்களிலும் வெளியேறினர். இதன் பின்னர் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 118.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் மோயீன் அலி ஒரு ரன்னிலும், இயான் பெல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். கடந்த முறை இரட்டை சதம் விளாசிய கேப்டன் குக், இந்த முறை 65 ரன்களில் வெளியேறினார்.
     2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி, 51 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 76 ரன்களுடனும் (118 பந்து, 9 பவுண்டரி), ஜானி பேர்ஸ்டோ 27 ரன்களுடனும் (56 பந்து) களத்தில் உள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai