சுடச்சுட

    

    இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்

    By சென்னை,  |   Published on : 24th October 2015 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    34

    இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரஸ்ஸெல் டாமிங்கோ தெரிவித்தார்.
     இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற 4-ஆவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி சதம் விளாச, இந்திய அணி, 299 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலை வகித்து வருகின்றன. போட்டிக்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ரஸ்ùஸல் டாமிங்கோ கூறியதாவது:
     அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா ஆகியோருடன் விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய விதம் அருமையானது. அவருடைய இன்னிங்ஸ் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்திவிட்டது.
     பெரிய பார்ட்னர்ஷிப் எங்களுக்கு அமையவில்லை. ஒவ்வொரு முறையும் பார்ட்னர்ஷிப் அமைக்கும்போது விக்கெட்டுகள் விழுந்துவிட்டன. எல்லா சிறப்புகளும் இந்தியாவையே சேரும்.
     இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர். அவர்கள் (இந்திய அணி) பந்துவீசும் போது விக்கெட்டுகள் எளிதாக வீழ்ந்தன. அதனாலேயே எங்களால் இந்திய அணியை தோற்கடிக்க இயலவில்லை. உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை இந்தியா கொண்டுள்ளது.
     சொந்த மண்ணில் சூழலுக்கு தகுந்தவாறு எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மொத்தத்தில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி எங்களைவிட சிறப்பாக விளையாடியது என்றார் அவர். இப்போட்டியில் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களான ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும்வீழ்த்தினர்.
     அதிக சவால் அளித்த ஆட்டம்: விராட் கோலி
     இந்திய துணை கேப்டன் விராட் கோலி கூறுகையில், "ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சவால் அளித்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு தாக்குதல் மிகவும் வலுவாக இருந்தது. இந்தத் தொடர் முழுவதும் அவர்கள் (தென் ஆப்பிரிக்கா) சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். நாங்கள் பேட்டிங் செய்தபோது மைதானம் வேகத்துக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் பவுண்டரிகள் விளாசுவது எங்களுக்கு கடினமாக இருந்தது. இதனால், நான் அதிகமாக ஓடியே ரன் எடுக்க வேண்டியிருந்தது. இதனால்தான் எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. கடைசியில் எல்லாம் சரியாகவே முடிந்துள்ளது' என்றார். இந்த ஆட்டத்தில் 66 ஒற்றை ரன்களும், 9 இரட்டை ரன்களும் ஓடி எடுத்தார். இது தவிர 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 138 ரன்கள் (140 ரன்கள்) திரட்டினார்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai