சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 163 ரன்களில் சுருண்டது மே.இ.தீவுகள்

    By கொழும்பு,  |   Published on : 24th October 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    32

    இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 163 ரன்களில் சுருண்டது.
     இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 200 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 5.2 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. இரவில் மழை பெய்ததன் காரணமாக 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டம் அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், தம்மிகா பிரசாத், தில்ருவான் பெரேரா ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் ஒருவர் கூட 50 ரன்களை எட்டவில்லை. பிரத்வெயிட் 47 ரன்கள் எடுத்ததே மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களில் அதிகபட்சமாக அமைந்தது. அந்த அணி, 64.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 163 ரன்களில் சுருண்டது. தம்மிகா பிரசாத் 4 விக்கெட்டுகளும், பெரேரா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. கௌஷல் சில்வா 31 ரன்களுடனும், தினேஷ் சண்டிமால் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக 3-ஆவது வரிசையில் களமிறங்கிய அறிமுக வீரர் கௌஷல் மெண்டிஸ் 39 (66 பந்து, 7 பவுண்டரி) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை மண்ணில் கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியே பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
     இலங்கை அணியில் 3 அறிமுக வீரர்கள்
     கொழும்பு, அக்.23: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் மூன்று அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
     இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான இலங்கை அணி வீரர்கள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளனர்.
     இதில் வலது கை பேட்ஸ்மேனான சேஹன் ஜெயசூர்யா, சுழற் பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா ஆகிய 3 வீரர்கள் ஒரு நாள் போட்டியில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஜெயசூர்யாவும், வாண்டர்சேவும் சர்வதேச டி-20 போட்டியில் ஏற்கெனவே விளையாடிய அனுபவமுடையவர்கள். இவர்கள் தவிர டெஸ்ட் போட்டியில் சரியாக ரன்குவிக்காததால் அணியிலிருந்து நீக்கப்பட்ட இடதுகை பேட்ஸ்மேன் லஹிரு திரிமானிக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேபோல அதிரடி பேட்ஸ்மேன் திலகரத்னே தில்ஷான், வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஆகியோரும் ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ளனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai