சுடச்சுட

  

  ஏர் ஏசியா ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சாகேத் மைனேனி

  By  பெங்களூரு,  |   Published on : 24th October 2015 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏர் ஏசியா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாகேத் மைனேனி முன்னேறியுள்ளார்.
   ஏர் ஏசியா ஓபன் டென்னிஸ் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகேத் மைனேனி, பெல்ஜியத்தின் யானிக் மெர்டென்ûஸ எதிர்கொண்டார்.
   போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்திலுள்ள சாகேத், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்திலுள்ள மெர்டென்ûஸ 6-3, 7-6 (6) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
   அவர் தனது அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் அட்ரியான் மெனெண்டûஸ எதிர்கொள்கிறார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சனம் சிங், பிரிட்டனின் ஜேம்ஸ் வார்டிடம் 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்.
   சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்திலுள்ள இந்தியாவின் சாகேத் மைனேனி - சனம் சிங் ஜோடி, ஜான் பால் ஃப்ருட்டெரோ (அமெரிக்கா) - விஜய் சுந்தர் பிரசாந்த் (இந்தியா) ஜோடியை எதிர்கொள்கிறது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai