Enable Javscript for better performance
ஐஎஸ்எல் கால்பந்து: வடகிழக்கு அணிக்கு 2-ஆவது வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    ஐஎஸ்எல் கால்பந்து: வடகிழக்கு அணிக்கு 2-ஆவது வெற்றி

    By  குவாஹாட்டி,  |   Published on : 24th October 2015 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    29

    இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் கொல்கத்தாவை வீழ்த்தி வடகிழக்கு யுனைட்டெட் எஃப்சி அணி 2-ஆவது வெற்றியைப் பெற்றது.
     ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் குவஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் வடகிழக்கு யுனைட்டெட் எஃப்சி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் 5-ஆவது லீக் ஆட்டமான இப்போட்டியை காண 25 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். 6 நாள்களுக்கு முன்னர் எஃப்சி புணே சிட்டி அணியிடம் தோல்வியைத் தழுவியதால் இந்த முறை நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணியில் 6 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து 3-ஆவது முறையாக உள்ளூர் மைதானத்தில் விளையாடிய வடகிழக்கு அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டனர்.
     ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் கொல்கத்தாவின் ஜாவி லாரா நீண்ட தூரத்தில் இருந்து அடித்த பந்தை சக வீரர் இயான் ஹியூமி பாஸ் செய்ய காத்திருந்தார். ஆனால், அதற்கு இடமளிக்காமல் எதிரணி கோல் கீப்பர் ரெஹினேஷ் துரிதமாக செயல்பட்டு பந்தை கைப்பற்றினார்.
     முதல் பாதி சமநிலை: 19-ஆவது நிமிடத்தில் வடகிழக்கு அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இடது புறத்தில் 29 யார்ட் தொலைவிலிருந்து புருனோ அடித்த பந்து, கம்பத்தை விட்டு விலகிச் சென்றதால் கோல் வாய்ப்பு தவறியது. இதற்கு 3 நிமிடங்கள் கழித்து புருனோவுக்கு மீண்டும் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. இந்த முறையும் அவர் அடித்த பந்து, கோல் கீப்பரிடம் தஞ்சமடைந்தது.
     இதேபோல, 29-ஆவது நிமிடத்தில் ரேகன் சிங் அபாரமாக இலக்கை நோக்கி "வாலி' ஷாட் அடித்தார். இதனை கொல்கத்தா கோல் கீப்பர் அம்ரிந்தர், குறுக்கே பாய்ந்து ஒற்றை கையில் தடுத்தார். தொடர்ந்து இரு அணி வீரர்களின் கோல் முயற்சி எதுவும் முதல் பாதியில் கைகூடவில்லை.
     இரண்டாவது பாதியிலும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருந்தது. இருப்பினும் 77-ஆவது நிமிடத்தில் வடகிழக்கு அணியின் மாற்று வீரர் நிக்கோலஸ் வீலிஸ் ஆட்டத்தின் முதல் கோலை பதிவு செய்தார்.
     வடகிழக்கு அணி வெற்றி: சஞ்சு, பாஸ் செய்த பந்தை நிக்கோலஸ் கோல் வலையை நோக்கி திருப்பினார். அவர் அடித்த பந்து கம்பத்தில் பட்டு வலைக்குள் புகுந்தது. இதன் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கொண்டு கோல்கள் எதுவும் பதிவாகவில்லை. இதனால், 1-0 என்ற கணக்கில் வடகிழக்கு யுனைட்டெட் அணி வெற்றி பெற்றது. அந்த அணி தொடர்ச்சியாக பெறும் 2-ஆவது வெற்றி இதுவாகும்.
     இன்றைய ஆட்டம்
     சென்னையின் எஃப்சி
     - எஃப்சி புணே சிட்டி
     நேரம் : இரவு 7 மணி
     இடம்: சென்னை
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai