சுடச்சுட

  
  33

  இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவர்களின் முடிவுக்கு அதிருப்தியை வெளியிட்ட தென் ஆப்பிரிக்க வீரர் ஃபாப் டு
   பிளெஸ்ஸிஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
   இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கின் போது அக்ஷர் படேல் வீசிய 15-ஆவது ஓவரில் டு பிளெஸ்ஸிஸ் அடித்த பந்தை தோனி கேட்ச் செய்தார். இதற்கு அவுட் கொடுத்த நடுவர்களை நோக்கி தனது வலது கையை உயர்த்தி அதிருப்தியை வெளிப்படுத்தினார் டு பிளெஸ்ஸிஸ். இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர், இக்குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து டு பிளெஸ்ஸிஸின் ஆட்ட ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai